பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி

Bookmark and Share

பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர்  - சார்மி

டோலிவுட்டில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப்பிடித்த சார்மி பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.

அவர் தற்போது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லக்ஷ்மி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது ஜோதி லக்ஷ்மி படத்தை பற்றியும், இயக்குனர் பூரி ஜெகன்நாத் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,

ஒரு படத்திற்கு இயக்குனர் தான் இதயம் போன்றவர். அவரைத்தான் அந்த படத்தில் பணியாற்றும் அனைவருமே முழுமையாக நம்ப வேண்டும். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதனை சரியாக செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். நான் எப்பொழுதுமே இயக்குனர்களை முழுவதுமாக நம்புவேன். குறிப்பாக பூரி ஜெகநாத் படம் என்றால் நான் கதை கூட கேட்க மாட்டேன்.

ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதை சரியாக செய்வேன். எனக்கு தலை சிறந்த நடிகரான அமிதாபுடன் நடிக்க காரணமாக இருந்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான்.

அதுவே என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. தற்போது நான் நடித்துவரும் ஜோதி லக்ஷ்மி படம் முற்றிலும் வித்தியாசமான படமாகும். என்னை முற்றிலுமாக வித்தியாசமாக மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர்.

நானும், அவரும் நடிப்பு தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றோம். குறிப்பாக ஆக்க பூர்வமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றோம். அவர் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவ்வாறு சார்மி கூறியுள்ளார்.


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions