சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு

Bookmark and Share

சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு

தமிழில் சிம்புவும் நாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சார்மி.

அதன் பின் தமிழில் அவருக்குப் பெரிதாக எந்த வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால், தெலுங்கில் அவருக்குத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கு பலருடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

சமீப காலமாக அங்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தவருக்கு பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  ஜோதி லட்சுமி  படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படம் இது.

நேற்று சார்மியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். மிகவும் அருமையாக இருந்த டிரைலர் தெலுங்குத் திரையுலகினரிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ராம் கோபால் வர்மா உட்பல பல தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் அந்த டிரைலரைப் பாராட்டி வருகின்றனர். சார்மிக்கு இந்தப் படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கும் என்று சொல்லி வருகிறார்கள்.

ஜோதி லட்சுமி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.கல்யாண், சார்மியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிங்க முகம் கொண்ட ஒரு வைர மோதிரத்தை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து அந்த மோதிரத்துடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் சார்மி.

படத்தின் வெற்றிக்கு இது அட்வான்ஸ் பரிசு என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி
‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions