நீச்சல் உடையில் சர்ச்சை கிளப்பிய சார்மிக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Bookmark and Share

நீச்சல் உடையில் சர்ச்சை கிளப்பிய சார்மிக்கு எதிர்ப்பு வலுக்கிறது

வாய்ப்புக்காக காத்திருந்த சார்மிக்கு அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனருமான புரி ஜெகநாத் கைகொடுத்திருக்கிறார். அடுத்து இயக்கும் ‘ஜோதிலட்சுமி‘ படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவுடன் இருக்கிறார் சார்மி. அதற்காக புது காஸ்டியூமில் விதவிதமாக ஸ்டில் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஆர்வ மிகுதியில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தன்று தனது இணையதள பக்கத்தில் நீச்சல் உடையுடன் ஜூஸ் கிளாஸ் ஒன்றுக்கு முத்தமிட்டபடி தோன்றும் ஸ்டில் வெளியிட்டு யுகாதி வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார் சார்மி.

இது அவரை வில்லங்கத்தில் இழுத்துவிட்டிருக்கிறது. யுகாதி என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் விழா அதற்கு கொஞ்சமும் பொருந்தாத வகையில் ஜூஸ் கிளாஸுக்கு முத்தம் கொடுப்பதுபோல் அதுவும் நீச்சல்உடையில் நின்றபடி வாழ்த்து கூறுவதா என்று பலர் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் சார்மி. 


Post your comment





Related News
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!
ஜோதிலக்ஷ்மிக்காக உடல் எடையைக் குறைத்த சார்மி
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்
சார்மிக்கு தயாரிப்பாளர் வைர மோதிரம் பரிசு
தலைப்புசெய்தியில் வந்த ஜெகபதிபாபு-சார்மி!
சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி
மெகா ஸ்டார் ரசிகர்களை குஷிப்படுத்திய சார்மி
பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions