சார்மி இடுப்பை கிள்ளிய வாலிபருக்கு அடி–உதை

Bookmark and Share

சார்மி இடுப்பை கிள்ளிய வாலிபருக்கு அடி–உதை

தமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘ஆஹா எத்தனை அழகு’, ‘காதல் கிசுகிசு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சார்மி. இவர் தற்போது விக்ரமுடன் ‘பத்து என்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்து இருந்த விருந்து நிகழ்ச்சிக்கு சார்மி சென்று இருந்தார். அங்கு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.

அப்போது அந்த வாலிபர் திடீரென சார்மி இடுப்பை பிடித்தார். இதனால் சார்மி அதிர்ச்சியானார். வாலிபரை பிடித்து ஆவேசமாக தள்ளி விட்டார். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

இதுகுறித்து சார்மி கூறும்போது, அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன்.

அப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருக்க விடமாட்டேன்’’ என்றார். 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions