சார்மி என்னுடைய நல்ல தோழி அவ்ளோதான்; கடுப்பான பூரி ஜெகன்நாத்

Bookmark and Share

சார்மி என்னுடைய நல்ல தோழி அவ்ளோதான்; கடுப்பான பூரி ஜெகன்நாத்

ஒரு ஹீரோ மற்றொரு ஹீரோயினிடம் பேசினாலே அதை காதல், கல்யாணம் வரை இழுத்துக் கொண்டுபோய் கும்மியடித்துவிடுகிறது மீடியாக்கள், இதில் சம்பந்தப்பட்ட நடிகரோ, நடிகையோ வாயை திறக்காத வரையில் எந்த பிரச்சனையும் இருக்காது அப்படி மீறி வாயை திறந்துவிட்டால் அவர்களை கண் கொத்தி பாம்பாக வலைவீசத் தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும்.

சமீபத்தில் இந்த மாதிரி பிரச்சனையில் சிக்கியிருப்பது நடிகர் அல்ல ஒரு இயக்குநர், அவர் தான் பூரி ஜெகன்நாத். வருண் தேஜ் உடன் இவர் இணையவிருந்த படத்தை டிராப் செய்துவிட்டு நடிகை சார்மியை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகிறார் பூரி ஜெகன்நாத்.

இதனை டோலிவுட் வட்டாரத்தில் பூரி ஜெகன்நாத்தும் சார்மிக்கும் இடையே ஏதோ இருக்கிறது என கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள், இது எப்படியோ சம்பந்தப்பட்டவர்களின் காதுக்கு செல்ல இதனை மறுத்து உடனே பூரி ஜெகன்நாத் ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது “என்னையும் சார்மியையும் பற்றி வரும் தவறான வதந்திகள் வருவதை நான் கண்டிக்கிறேன், சார்மி என்னுடைய நல்ல தோழி, இதற்கு முன்பு  என்னுடைய படங்களில் அவர் பணியாற்றியுள்ளார், என்னுடைய அடுத்த படத்தில் சார்மிதான் நாயகியாக நடிக்கிறார், எங்களுக்குள் எந்த தவறான பழக்கமும் இல்லை, கதை விவாதத்திற்காக நாங்கள் ஒன்றாக இருப்பதை யாரோ தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் இயக்குநர் பூரி ஜெகன்நாத்”. 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions