மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி

Bookmark and Share

மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி

வெளிநாட்டில் மரணம் அடைந்த நடிகை ஆர்த்தி அகர்வாலின் வீட்டை நடிகை சார்மி விலைக்கு வாங்கியுள்ளார். 

ஆர்த்தி அகர்வால் தெலுங்கில் அறிமுகமான புதிதில் அவருக்கு பெரிய படங்கள் வரவில்லை. சிறு பட்ஜெட் படங்களிலேயே நடித்தார். சம்பளமும் குறைவாகவே கொடுத்தார்கள். தனது சம்பள தொகையை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து ஒரு வீட்டை வாங்கினார். அந்த வீடு அதிர்ஷ்ட வீடாக அமைந்தது. அதை வாங்கிய பிறகு படவாய்ப்புகள் குவிந்தது. முன்னணி நடிகர்களுடன் நடித்தார். சம்பளமும் கூடியது. 

தெலுங்கில் முன்னணி இடத்தில் உள்ள நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை ஆர்த்தி அகர்வாலுக்கு கொடுத்தனர். சமீபத்தில் அந்த அதிர்ஷ்ட வீட்டை ஆர்த்தி அகர்வால் நடிகை சார்மிக்கு விற்று விட்டார். வீட்டை விற்ற பிறகு ஆர்த்தி அகர்வால் மார்க்கெட் சரிந்தது. பணம் கைவிட்டு போயின. நிதி நெருக்கடிக்கு ஆளானார். உடல் நலக்குறைவும் ஏற்பட்டு மரணம் அடைந்தார். 

ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய பிறகு சார்மியின் மார்க்கெட் சூடு பிடித்தது. நிறைய படங்கள் குவிகின்றன. பிசியான நடிகையாகியுள்ளார். சம்பளத்தையும் கூட்டி விட்டார். ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கியதால் அவரது அதிர்ஷ்டம் சார்மி கைக்கு மாறிவிட்டது என தெலுங்கு பட உலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி
சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions