ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி

Bookmark and Share

ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி

‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் சார்மி. அதைத்தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.  இவர் தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது தெலுங்கில் ‘ஜோதி லட்சுமி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் துணை நடிகர் ஒருவர் ஹாக்கி பேட்டால் சார்மியின் தலையில் அடிப்பதுபோல் ஒரு காட்சி உருவாக்கியுள்ளார்கள். இந்த காட்சியில் அந்த துணை நடிகர் தவறுதலாக முகத்தில் அடித்துவிட்டார். இதனால் சார்மிக்கு ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனே படக்குழுவினர் சார்மியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions