தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி

Bookmark and Share

தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி

பிரபல நடிகை சார்மி நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜோதிலக்ஷ்மி படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதால் சார்மி அதிக உற்சாகத்தில் காணப்படுகின்றார். டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் விமர்சகர்களிடமும் பாராட்டு பெற்றுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கும் அடுத்த படத்தில் நிதின் நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்டது. 

திடீரென இப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பல காரணங்கள் டோலிவுட்டில் உலா வந்தன. நடிகை சார்மியோ பொருளாதார சிக்கலின் காரணமாகவே நிதின் - பூரி படம் கைவிடப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது நிதின் தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதனால் சார்மி தனது டுவிட்டர் பக்கத்தில் நிதின்-பூரி படத்தில் பொருளாதார பிரச்சனை உள்ளதாக சிலர் கூறியதாகவும் அதனாலேயே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் சார்மி மன்னிப்பும் கேட்டுள்ளார். கைவிடப்பட்டதாக கருதப்பட்ட அப்படத்தில் நிதினுக்கு பதிலாக வருண் தேஜா நாயகனாக நடிக்கவுள்ளார். நடிகை சார்மி இப்படத்தில் இணை தயாரிப்பாளாரக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி
சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions