தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?

Bookmark and Share

தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?

தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, லாடம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் சார்மி நடித்த ஜோதி லட்சுமி படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு ஆரம்பத்தில் தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் இணை தயாரிப்பாளராக இருந்தார்.

ஆனால் அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து சார்மி இணை தயாரிப்பாளராக சேர்ந்தார். அவர் கூறும்போது, நிதினுக்கு பணபாக்கி இருந்ததால் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றார்.

இது நிதினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை அவர் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் நிதினின் தந்தையும் தெலுங்கு பட விநியோகஸ்தருமான சுதாகர் ரெட்டி கோர்ட்டில் சார்மி மீது அவதூறு வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளார். இதனால் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி
சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions