மீண்டும் தமிழுக்கு வந்த சார்மி

Bookmark and Share

மீண்டும் தமிழுக்கு வந்த சார்மி

2002ம் ஆண்டில் சிம்பு நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. தொடர்ந்து தமிழில், 'காதல் கிசுகிசு' படத்திலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ், தெலுங்கில் தயாரான 'லாடம்' படத்திலும் நடித்தார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராகப் பெயர் பெற்றவர் சார்மி.

சுட்டித்தனமான, குறும்புத்தனமான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். ஆனால், அங்கும் கடந்த சில வருடங்களாக சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விரைவில் 'ஜோதிலட்சுமி' என்ற படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

இரண்டு நாட்களக்கு முன்னர்தான் 'ஜோதிலட்சுமி' படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.  அதோடு தற்போது விக்ரம், சமந்தா நடித்து வரும் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் ஸ்டைல் டான்ஸ் ஆடுவதற்காக சென்னைக்குச் செல்கிறேன் என்று மட்டும் சார்மி குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடலின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனியார் தீம் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற உள்ளதாம்.

அந்தப் பாடலில் விக்ரம், சமந்தா ஆகியோரும் நடனமாட உள்ளார்களாம்.பல வருடங்கள் கழித்து சார்மி மீண்டும் தமிழ்ப் படங்கள் பக்கம் தனது பார்வையை திருப்பியிருக்கிறார்.


Post your comment





Related News
என் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
தெலுங்கு பட அதிபருடன் மோதல்: சார்மி மீது அவதூறு வழக்கு?
சார்மியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நிதின் திட்டம்?
தவறான தகவலுக்கு மன்னிப்பு கேட்ட சார்மி
மரணமடைந்த ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கிய நடிகை சார்மி
அடுத்தடுத்து திரைக்கு வரும் சார்மியின் படங்கள்
சார்மியின் தலைப்பு செய்தி
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி
ஹாக்கி பேட்டால் அடிவாங்கிய சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions