இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?

Bookmark and Share

இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?

டோலிவுட்டின் பிரபல நடிகை சார்மி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்த ஜோதிலக்ஷ்மி படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் சார்மிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து சார்மி நடித்துள்ள மந்த்ரா 2 படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில்  நடிகர் விக்ரம் நடித்து வரும் பத்து எண்றதுகுள்ள என்ற படத்தில் சார்மி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் நடிகை சார்மி பிரபல தொழிலதிபரின் மகனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.25 லட்சம் வாங்கியுள்ள தகவல் வெளிவந்து டோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற குறிப்பிட்ட பிறந்த நாள் நிகழ்ச்சியில் இரண்டு மணி நேரம் மட்டும் கலந்து கொண்ட நடிகை சார்மி அதற்காக ரூ.25 லட்சம் மற்றும் முதல் வகுப்பு விமான டிக்கெட்டுகளையும் சன்மானமாக வாங்கியுள்ளாராம்.

இவ்விழாவில் நடிகர்கள் பிரமானந்தம், சசிக்குமார், அலி போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் டோலிவுட் பிரபலங்களுடன் சார்மி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை
படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி
சைகை படத்தில் பூனம்கவுர்!
நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!
ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா!
பூனம் கவுரை மோசடி செய்த மேனேஜர்!
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் பேய் படமாகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions