பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!

Bookmark and Share

பிரபல ஹீரோக்களுடன் மட்டுமே குத்துப்பாட்டுக்கு நடனமாடும் சார்மி!

காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சார்மி. அதையடுத்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு என சில படங்களில் நடித்தார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் எந்த நேரடி தமிழ்ப்படங்களிலும் நடிக்கவில்லை.

ஆனபோதும், அவர் தெலுங்கில் நடித்த படங்கள்தான் அவ்வப்போது தமிழில் டப்பாகிக்கொண்டிருந்தன. அதனால்தான் சார்மிக்கும், தமிழ் ரசிகர்களுக்குமிடையிலான தொடர்பு கட் ஆகாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது விக்ரம் நடித்து வரும பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் ஆடியிருக்கிறார் சார்மி. சாதாரண டூயட் பாடல்களிலேயே அதிரடி ஆட்டம் போடும் சார்மி, இந்த குத்துப்பாட்டில் நறுக் ஆட்டம் போட்டிருக்கிறாராம்.

அதோடு இதையடுத்து தொடர்ந்து தமிழ் சினிமா கோதாவில் இறங்கவும் அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்தநேரத்தில், விக்ரம் படத்தைப்போலவே இன்னொரு படத்தில் குத்தாட்டமாட சார்மியை ஒரு தயாரிப்பாளர் அணுகியபோது, படத்தின் ஹீரோ பிரபலமில்லாதவர் என்பதை சுட்டிக்காட்டி நடனமாட மறுத்து விட்டாராம்.

ஆக முன்னணி ஹீரோ படங்களுக்குமே மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறாராம் சார்மி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions