சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை

Bookmark and Share

சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை

தமிழில் ‘காதல் அழிவதில்லை. காதல் கிசுகிசு, லாடம்’ போன்ற படங்களில் நடித்த சார்மி தற்போது விக்ரமுடன் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். 

சார்மியை தனியார் அமைப்பு ஒன்று ஐதராபாத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்து சென்றுள்ளார் அங்கு ஒரு ரசிகர் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு அருகில் சென்றார்.

சார்மியும் அதனை அனுமதித்து செல்பிக்கு போஸ் கொடுத்தபடி ரசிகருடன் நெருங்கி நின்றார். அப்போது அந்த ரசிகர் அத்துமீறி திடீரென்று சார்மியின் கையை பிடித்தார். 

கட்டி அணைக்கவும் முயன்றார். சார்மி ஆவேசமாக அந்த ரசிகரை தள்ளிவிட்டார். தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக விருந்தை ஏற்பாடு செய்தவர்களிடம் புகார் செய்தார்.

இதையடுத்து அந்த ரசிகரை பிடித்து சிலர் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அவரும் திருப்பி அடித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு அந்த ரசிகர் வெளியே விரட்டப்பட்டார். 

இதனால் பதறிய சார்மி சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு அவசரமாக புறப்பட்டுச்சென்றுவிட்டார்.


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி
சைகை படத்தில் பூனம்கவுர்!
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!
ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா!
பூனம் கவுரை மோசடி செய்த மேனேஜர்!
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் பேய் படமாகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions