சாருஹாசன் எழுதிய ஆங்கில புத்தகம் வெளியீடு

Bookmark and Share

சாருஹாசன் எழுதிய ஆங்கில புத்தகம் வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். இவர் ‘உதிரிபூக்கள்’, ‘மூன்று முகம்’, ‘தளபதி’, ‘ஜெய்ஹிந்த்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் வக்கீல் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இவர் ‘திங்கிங் ஆன் மை ஃபீட்’ என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் இன்று மாலை நடந்தது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்களாக இந்நூல் விளங்குகிறது என்று சாருஹாசன் கூறினார். மேலும் தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். வாசகர்களின் கேள்விகளுக்கும் சுவைபட பதிலளித்தார்.

வக்கீல் தொழில் செய்தபோது நடந்த சுவையான சம்பவங்களையும் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் விளக்கிப் பேசினார். சாருஹாசனுடன் அவரது மனைவி கோமளமும் வாசகர்களுடன் பேசினார்.இந்நிகழ்ச்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சுரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions