நேபாள பூகம்பத்தில் சிக்கி உயிர் பிழைத்த சாயாசிங்

Bookmark and Share

நேபாள பூகம்பத்தில் சிக்கி உயிர் பிழைத்த சாயாசிங்

திருடா திருடி, அனந்தபுரத்து வீடு உள்பட பல படங்களில் நடித்தவர் சாயா சிங். தற்போது யாத்ரீகன் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். ஹீரோவாக கிஷோர் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படிப்பிடிப்புகள் நேபாள எல்லையில் உள்ள  சிலிகுடியில் நடப்பதாக இருந்தது. இதற்காக சாயாசிங், கிஷோர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் பெங்களூரிலிருந்து சிலிகுடிக்கு விமானத்தில் புறப்பட்டனர்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முதல் நாள் சாயாசிங் தனது தாயாருடன் ஊரை சுற்றிப்பார்க்க காரில் சென்றார். அப்போதுதான் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பூகம்பம் ஏற்படுகிறது காரில் இருந்து இறங்கி ஓடுங்கள் என்று டிரைவர் கத்தியிருக்கிறார்.

அதன் பிறகு சாயாசிங்கும், அவரது தாயாரும் ஓட்டலுக்கு ஓடினர். ஓட்டலில் இருந்தவர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். பூகம்ப பீதி முடிந்ததும் ஓட்டலுக்கு திரும்பினார்கள்.

சிலிகுடியை சுற்றி பூகம்பம் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்த செய்தி பிறகுதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது."இறைவன் அருளால் நாங்கள் உயிர் தப்பினோம். மக்கள் பயந்தபடி அங்கும் இங்கும் ஓடிய காட்சி மறக்க முடியாதது.

இயற்கையின் சக்தியையும், மனிதனின் உயிர் பயத்தையும் ஒரே நேரத்தில் கண்டபோது வாழ்க்கையின் மீதுள்ள பிடிப்பு  குறைந்திருக்கிறது" நேபாள எல்லை கிராமத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பி விட்டோம் என்கிறார் சாயாசிங்.

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions