தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சாயா சிங்

Bookmark and Share

தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சாயா சிங்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருடா திருடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் சாயாசிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலில் இவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய குத்தாட்டம், இவரை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்தது. 

அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ‘அருள்’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினர். பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார். 

அதன்பின், உதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் உதயநிதிக்கு அக்காவாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘உள்குத்து’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் சாயா சிங். இந்த படத்தில் சாயாசிங்கின் கதாபாத்திரம் மிகவும் வலுவானது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

இப்படத்தில் தினேஷ்-நந்திதா ஆகியோர் நடிக்கின்றனர். ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன், திரில்லர் என அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதாக இப்படம் உருவாகி வருகிறது.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions