வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தனுஷூடன் நடிப்பேன் - சாயா சிங்!

Bookmark and Share

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தனுஷூடன் நடிப்பேன் - சாயா சிங்!

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தப்படத்தில் தனுஷூடன் அவர் ஆடிய மன்மத ராசா... பாட்டை இன்றளவும் ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள், அப்படியொரு ஒரு ஆட்டம் ஆடியிருந்தார். தொடர்ந்து அந்த படத்திற்கு பிறகு வல்லமை தாராயோ, அனந்தபுரத்து வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பிறகு டி.வி., நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனக்கு ஏற்ற மாதிரியான வேடங்களில் நடித்து வருபவர், தற்போது மாஜி ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகும் உயிரே உயிரே படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இதில் பங்கேற்ற சாயா சிங் நம்மிடம் பேசும்போது, தற்போது தமிழில் இரண்டு-மூன்று படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றவர் மீண்டும் தனுஷூடன் நடிப்பீர்களா...? என்று கேட்டபோது, என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்... நான் இந்தளவுக்கு பிரபலமானதே தனுஷால் தான்.

அவருடன் நடித்த திருடா திருடி படம் தான் என்னை பிரபலமாக்கியது. மீண்டும் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த எப்படிப்பட்ட வேடம் என்றாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றார்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions