தமிழகத்திற்கு உதவ ஒன்றிணையும் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள்!

Bookmark and Share

தமிழகத்திற்கு உதவ ஒன்றிணையும் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள்!

மழை வெள்ளதால் பெரும் பாதிப்பைச் சந்தித்த சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு உதவ தெலுங்கு திரை உலகம் ஒன்றிணைந்துள்ளது. 

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர் என பலரும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர். 

மேலும் டோலிவுட்டின் இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து மானா மெட்ராஸ் கோஸம் என்ற அமைப்பையும் உருவாக்கி தெலுங்கு நடிகர் ராணா, பிரபாஸ் மற்றும் பலர் மானா மெட்ராஸ் கோஸம் என்ற பெயரில் தமிழத்திற்கு நிவாரண பொருள்களை திரட்டி வருகின்றார். உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் என பல அத்தியாவசிய பொருட்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

நமது மெட்ராஸிற்காக என பொருள்படும் இந்த திட்டத்திற்கு தெலுங்கு பிரபலங்கள் நானி, ராஜ் தருண, லக்ஷ்மி மஞ்சு, சானியா மிர்சா, ராகுல் ப்ரீத்தி சிங், அகில், நவ்தீப் என பலரும் ஆதரவு தெரிவித்து தம்மால் முடிந்த நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராம்நாய்டு ஸ்டுடியோஸிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நடிகர் நானி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் “நாளை(டிசம்பர் 6) மாலை 4 மணி முதல் 6 மணி வரை மஞ்சீரா மற்றும் குகட்பல்ய போரம் மால்களில் மானா மெட்ராஸ் கோஸம் அமைப்பிலிருந்து 10 நடிகர்கள் வந்து நிவாரண நிதி திரட்டுவர்” என்று டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions