8வது ஆண்டில் 'சென்னை 28'

Bookmark and Share

8வது ஆண்டில் 'சென்னை 28'

விளையாட்டைப் பற்றி விளையாட்டாக படம் எடுத்து தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய தடத்தைப் பதித்த படம் 'சென்னை 28'. யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக வெங்கட் பிரபு இயக்கிய படம்.

முன்னணி நட்சத்திரங்கள் என யாருமேயில்லாமல் ஒன்றிரண்டு படங்களில் தலை காட்டியவர்கள், புதுமுகங்கள் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் சரியாக 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் 'சென்னை 28'.

எங்க படத்துல கதையே இல்லை என உண்மையைச் சொல்லி, வெறும் சம்பவங்களாலேயே ஒரு படத்தைக் கொடுத்து இப்படியும் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்த படம் அது. யுவன்ஷங்கர் ராஜா மட்டுமே  அந்தப் படத்தில் அதிகம் தெரிந்த முகமாக இருந்தார்.

முக்கிய கதாபாத்திரங்களில், ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அஜய் ராஜ், விஜயலட்சுமி, இளவரசு என பலர் நடித்திருந்தனர். நகைச்சுவை இழையோடிய திரைக்கதை, கலகலப்பான கதாபாத்திரங்கள், யதார்த்தமான காதல், அருமையான நட்பு இவையனைத்தும்தான் அந்தப் படம் வெற்றியடைய காரணமாக அமைந்தது.

அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இன்று தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இன்றைய சினிமா இளைஞர்களின் கையில் வந்து விட்டது என்பதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்த ஒரு படம்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions