சென்னை 28 பார்ட் 2 எப்படி இருக்கு? முதல் பாகத்தை மிஞ்சியதா?

Bookmark and Share

சென்னை 28 பார்ட் 2 எப்படி இருக்கு? முதல் பாகத்தை மிஞ்சியதா?

9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சென்னை 28 படம் இன்றுவரை தமிழில் ஒரு கல்ட் கிளாசிக். நேற்றுகூட இந்த படத்தை ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள். 9 வருடங்களுக்கு முன்பு அடைந்த அதே உற்சாகத்தை கொஞ்சமும் குறையாமல் நேற்றும் அடையமுடிந்தது.

அதுதான் அந்த படத்தின் வெற்றி.சரி, இன்று வெளியாகியிருக்கும் பார்ட் 2-வுக்கு வருவோம். 9 வருடங்களுக்கு பிறகு ஷார்க்ஸ் அணியினரின் தற்போதைய நிலை என்ன? முன்புபோலவே இப்பவும் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? அதில் எல்லோருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா? இவ்வளவுதான் கதை.

இதை கொஞ்சமும் சலிக்காமல் தனது டிரேட்மார்க் நகைச்சுவை காட்சிகளுடன் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் வெங்கட் பிரபு. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் யுவனின் இசைதான் பக்கபலம்.

அதுவும் வைபவ் வரும்போதெல்லாம் கூடவே வரும் அந்த பின்னணி இசை, வாவ்.ஆனால் முதல் பாகத்தில் காமெடியுடன் சேர்ந்து கிடைத்த சென்டிமென்ட் மற்றும் நெகிழ்ச்சி தருணங்கள் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். அதேபோல் முதல் பாகம் அளவுக்கு படம் எதார்த்தமாக செல்லவில்லை.

ஆகமொத்தம், ஆங்காங்கே தென்படும் சில குறைகளையும் முதல் பாகத்தோடு கம்பேர் செய்யாமலும் பார்த்தால் நிச்சயம் முதல் பாகம் கொடுத்த அதே உற்சாகத்தை இந்த படமும் கொடுக்கும்.


Post your comment





Related News
தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்
வடசென்னை படம் தாமதமாவது ஏன்?: வெற்றிமாறன் விளக்கம்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
இதனால் தான் வட சென்னை படத்திலிருந்து விலகினாராம் விஜய் சேதுபதி
சென்னை 28 மூன்றாம் பாகம்?
சென்னையில் ஜல்லிக்கட்டு வேண்டும்.. ஆர்.ஜே.பாலாஜி திடீர் வேண்டுகோள்!
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?
தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
வடசென்னை படத்தில் இருந்து விலகிய நடிகர்- குழப்பத்தில் படக்குழு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions