புதிய சிந்தனைகள் உருவாக்கபட வேண்டும்: இயக்குனர் சேரன் பேச்சு

Bookmark and Share

புதிய சிந்தனைகள் உருவாக்கபட வேண்டும்: இயக்குனர் சேரன் பேச்சு

குடியாத்தம் நெல்லூர் பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1954–55–ம் ஆண்டு ஆறாம் படிவம் பயின்ற மாணவர்கள் மணிவிழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவின் நிறைவு விழா வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். டாக்டர் வி.ராஜூ, டாக்டர் எஸ்.நாராயணன், சங்கர் விசுவநாதன், காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புலவர் வே.பதுமனார் வரவேற்றார். விழாவில் டாக்டர் எ.ஞானம், சினிமா இயக்குனர் சேரன், நீதிபதி பொன்.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:– 1950–ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக இருந்து சொந்த கட்டிடம் கூட இல்லாமல் மடம் ஒன்றில் இருந்தது தான் நாங்கள் படித்தோம்.

ஒரு வருடம் கழித்து தான் பள்ளிக்கு கட்டிடம் வந்தது. நாங்கள் எல்லோரும் குக்கிராமத்தில் இருந்து நடந்து வந்து படித்தவர்கள் தான். 60 வருடங்கள் கழித்து எங்களோடு படித்தவர்களை ஒன்று சேர்த்து பார்க்கும் வாய்ப்பு இந்த விழாவின் மூலம் நிறைவேறி உள்ளது.

எங்களுக்கு கல்வி தந்த ஆசிரியர்களை நாங்கள் மறக்கவில்லை. அந்த காலத்தில் ஆசிரியர்கள் அறிவை கற்றுத்தந்தனர். ஒழுக்கக் கட்டுபாட்டை போதித்தனர். அதனால் தான் நாங்கள் நல்லமுறையில் வளர்ந்து மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசு பள்ளிகள் அனாதை பள்ளிகள் போல உள்ளன. அவைகள் தனியார் பள்ளிகள் போல மாற வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். 

 


Post your comment





Related News
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்
சேரனின் போராட்டம் குறித்து விஷால் அதிரடி அறிக்கை.!
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
விஷாலை சரமாரியாக கேள்வி கேட்ட சேரன்!
ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்
செக் மோசடி வழக்கு: டைரக்டர் சேரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சரத்குமாருக்கு ஆதரவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த சேரன்
செக் மோசடி வழக்கில் சிக்கிய டைரக்டர் சேரன் மகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions