செக் மோசடி வழக்கில் சிக்கிய டைரக்டர் சேரன் மகள்!

Bookmark and Share

செக் மோசடி வழக்கில் சிக்கிய டைரக்டர் சேரன் மகள்!

தமிழ் திரைப்பட டைரக்டர் சேரன் ‘சி2எச்’ என்ற திரைப்பட கேசட்டுகள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இதன் நிர்வாக இயக்குனராக அவரது மகள் நிவேதா பிரியதர்சினி உள்ளார். பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளின் முகவராக பரமக்குடி மாதவன் நகர் பழமுத்துநாதன் (வயது40) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் ரூ.80 ஆயிரம் டெபாசிட் செலுத்தினாராம். அந்த நிறுவனம் சரியாக செயல்படாததால் கணக்குகளை சரிபார்த்து டெபாசிட் தொகையை திரும்பத் தருவதாக சேரனும், அவரது மகளும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து 27.6.2015 அன்று அந்த தொகைக்காக பழமுத்துநாதனுக்கு காசோலை வழங்கி உள்ளனர். அந்த காசோலையை 4.7.2015ல் அவர் பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் செலுத்தினாராம். ஆனால் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பி விட்டது.

இதுபற்றி டைரக்டர் சேரனிடம் கேட்டபோது 4 நாட்கள் கழித்து மீண்டும் அந்த காசோலையை வங்கியில் செலுத்தும்படி கூறியுள்ளார். அதற்குள் தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாகவும் கூறினாராம்.

அதன்படி கடந்த 10.7.2015ல் மீண்டும் அந்த காசோலையை பழமுத்துநாதன் வங்கியில் செலுத்தியுள்ளார். அப்போதும் பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.

இதுகுறித்து பழமுத்துநாதன் பரமக்குடி கோர்ட்டில் டைரக்டர் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இதுதொடர்பாக டைரக்டர் சேரன், அவரது மகள் பிரியதர்சினி ஆகிய 2 பேரையும் வருகிற 30–ந்தேதி பரமக்குடி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்
சேரனின் போராட்டம் குறித்து விஷால் அதிரடி அறிக்கை.!
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
விஷாலை சரமாரியாக கேள்வி கேட்ட சேரன்!
ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்
செக் மோசடி வழக்கு: டைரக்டர் சேரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சரத்குமாருக்கு ஆதரவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த சேரன்
சேரன் படத்துக்கு சிவில் கோர்ட்டு இடைக்கால தடை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions