4 உள்ளூர் டி.வி.சேனல்களில் டைரக்டர் சேரன் படம் உரிமம் இன்றி ஒளிபரப்பு

Bookmark and Share

4 உள்ளூர் டி.வி.சேனல்களில் டைரக்டர் சேரன் படம் உரிமம் இன்றி ஒளிபரப்பு

டைரக்டர் சேரன் திருட்டு டி.வி.டி.யை ஒழிக்கவும், புதிய திரைப்படங்களை வீட்டிலேயே பார்க்கும் வகையில் ‘சி.2.எச்’ சினிமா டூ ஹோம் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தில் டைரக்டர் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தை புதுவையில் டி.வி.டிக்களில் 100–க்கும் மேற்பட்ட முகவர்கள் விற்பனை செய்து வந்தார்கள். இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் திருட்டு டி.வி.டி.க்கள் புதுவையில் விற்கப்படுவதாக விற்பனை முகவர்கள் உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் புதுவையில் உள்ள தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் உரிய அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்பட்டதாக டைரக்டர் சேரனுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அவர் நேற்று புதுவை வந்தார். அவர் உரிய அனுமதியின்றி திரைப்படத்தை ஒளிபரப்பிய தனியார் தொலைகாட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பெரிய கடை போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து தனியார் தொலைகாட்சி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து டைரக்டர் சேரன் நிருபர்களிடம் கூறியதாவது:– என்படத்தை ஒளிபரப்பிய 3 உள்ளூர் டி.வி. சேனல்கள் குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். தற்போது 4–வது டி.வி. சேனல் மீது புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க கோரி முதல்–அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்
சேரனின் போராட்டம் குறித்து விஷால் அதிரடி அறிக்கை.!
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
விஷாலை சரமாரியாக கேள்வி கேட்ட சேரன்!
ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்
செக் மோசடி வழக்கு: டைரக்டர் சேரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சரத்குமாருக்கு ஆதரவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த சேரன்
செக் மோசடி வழக்கில் சிக்கிய டைரக்டர் சேரன் மகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions