சேரன் படத்துக்கு சிவில் கோர்ட்டு இடைக்கால தடை

Bookmark and Share

சேரன் படத்துக்கு சிவில் கோர்ட்டு இடைக்கால தடை

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், ரவிபிரசாத் பிலிம்ஸ் லேப்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், தாமினி சினியோகிராபி நிறுவனம் சார்பில் ‘அப்பாவின் மீசை’ என்ற தலைப்பில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சேரன், நடிகை நித்தியா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு தயாரிப்பு செலவுக்காக கடந்த 2012–ம் ஆண்டு ரூ 25 லட்சத்தை என்னிடம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நிவேதா பிரியதர்ஷினி கடனாக வாங்கினார். அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும். அந்த படத்தின் காப்புரிமை எனக்கு வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை பெற்றுள்ளனர். இந்த படத்தின் காப்புரிமை என்னிடம்தான் உள்ளது. எனவே, எனக்கு தரவேண்டிய பணத்தை திருப்பித்தரும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு 6–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 29–ந்தேதி வரை ‘அப்பாவின் மீசை’ படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.


Post your comment





Related News
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்
சேரனின் போராட்டம் குறித்து விஷால் அதிரடி அறிக்கை.!
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
விஷாலை சரமாரியாக கேள்வி கேட்ட சேரன்!
ஓட்டுக்காக மட்டும் எங்ககிட்ட வராதீங்க - சேரன் ஆவேசம்
செக் மோசடி வழக்கு: டைரக்டர் சேரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சரத்குமாருக்கு ஆதரவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த சேரன்
செக் மோசடி வழக்கில் சிக்கிய டைரக்டர் சேரன் மகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions