சிம்புதேவன் என்ன ஆனார்?

Bookmark and Share

சிம்புதேவன் என்ன ஆனார்?

புலி பட ரிலீஸிற்கு முந்தைய நாள் புலி சம்பந்தப்பட்ட அனைவரின் வீடு, ஆபீஸ்களிலும் ரெய்டு நடந்தது. விடிய விடிய நடந்த சோதனைக்கு நடுவிலும், புலி படத்தை போராடி வெளியே கொண்டு வந்துவிட்டது தயாரிப்பு தரப்பு.

இருந்தும் புலியின் எப்.எம்.எஸ் பிரிண்டுகளிலும் படு குழப்பம். தெலுங்கு பட டப்பிங் பிரதியை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டார்களாம். உள்நாட்டில் இன்னும் சுத்தம்… தெலுங்கு ஏரியாவுக்கு தமிழ் பெட்டி போய் சேர்ந்துவிட்டதாம்.

அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு போன் அடித்தால், யாராவது இங்கிருந்து அட்டர்ன் பண்ணினால் தானே? இப்படி ஏகப்பட்ட களேபரத்துடன் திரைக்கு வந்த புலியின் ரிசல்ட் என்ன?

படத்தின் இயக்குனர் சிம்புதேவன் தியேட்டருக்கு வந்தால், சட்டையை பிடிக்கிற கோபத்தோடு திரிகிறது விஜய் ரசிகர்கள் வட்டாரம். ரூரல் தியேட்டர்களில் ரசிகர்கள் சீட்டுகளை உடைத்து தியேட்டர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளனர்.

இந்நிலையில் புலி பட தயாரிப்பாளர்களும், விஜய்யும் சிம்புதேவனை போனில் அழைத்து காய்ச்சி எடுத்து விட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

 


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!
நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions