யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!

Bookmark and Share

யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!

விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் ஏற்கனவே பிரபல பத்திரிகை ஒன்றில் கார்ட்டூனிஸ்ட்டாக பணியாற்றியவர். அப்போது கி.மு.வில் கோமு என்றொரு சித்திரக்கதை எழுதினார்.

அந்தக் கதையைத்தான் தற்போது புலி என்ற பெயரில் படமாக இயக்கி வருகிறார். இப்படத்தில் புராண காலம், சமகாலம் என இரண்டு காலக்கட்டங்களில் கதை நிகழ்கிறது.

இவற்றில் புராணகாலத்தில்தான் புலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடைபெறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

புலி படம் வெளிவரும்போது, புராண காலத்தில் நடக்கும் காட்சிகளை வைத்து யாராவது கோர்ட்டுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக இப்போதே உஷாராகப் பேச ஆரம்பித்துவிட்டார் சிம்புதேவன்.

அதாவது, இது வரலாற்றுப்படமில்லை.. வரலாற்றுப் புனைவு படம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் யாராவது பிரச்சனை செய்ய முற்பட்டால் இது கற்பனையான படம் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் அல்லவா? நல்லாத்தான்யா யோசிக்கிறாங்க!


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions