சிம்புதேவனுக்கு திருப்தி கொடுக்காத புலி கிராபிக்ஸ் பணிகள்

Bookmark and Share

சிம்புதேவனுக்கு திருப்தி கொடுக்காத புலி கிராபிக்ஸ் பணிகள்

விஜய்-க்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் டீசர் யூ டியூபில் வெளியான 2 நாட்களுக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், திரையுலக நட்சத்திரங்களான சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலரும் ‘புலி’ டீசருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது இயக்குனர் சிம்புதேவனுக்கு இதுவரை இப்படத்திற்காக செய்யப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் திருப்திகரமாக இல்லையாம். ரசிகர்களை முழு உணர்வுடன் ரசிக்க வைக்கும்படி இல்லாததால் இந்த கிராபிக்ஸ் பணிகளை மறுபடியும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். இதனால், ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் முதலில் இருந்து தொடங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

‘புலி’ படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். 


Post your comment





Related News
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!
நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன்
ஒரு மணி நேரத்தில் பாட்டு பாடி முடித்த விஜய்: சிம்புதேவன் புகழாராம்
புலி டீசர் - நடுநிலை ரசிகர்களின் கருத்து இதுதான்.....
ஸ்பாட்டில் விஜயை மகிழ்வித்த சிம்புதேவன்
லிங்கா லொகேஷனில் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions