ஒரு மணி நேரத்தில் பாட்டு பாடி முடித்த விஜய்: சிம்புதேவன் புகழாராம்

Bookmark and Share

ஒரு மணி நேரத்தில் பாட்டு பாடி முடித்த விஜய்: சிம்புதேவன் புகழாராம்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீதேவி, நான் ஈ சுதிப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. இது ரசிகர்களிடைய அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. ஆனால் இந்தப் பாடலை விஜய் ஒரு மணி நேரத்திலேயே பாடி முடித்திருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் சிம்புதேவன் கூறும்போது, ‘விஜய் ஒரு சிறந்த பாடகர். இவர் இந்த படத்தில் ‘வானமே கிட்ட வருதே... வானவில் வட்டமாகுதே... எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடலை ஒரு மணி நேரத்திலேயே பாடி முடித்துக் கொடுத்தார். அவர் சிறந்த பாடகர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. இந்தப்பாடல் இந்த வருடத்தின் சிறந்த பாடலாக அமையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Post your comment





Related News
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!
நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன்
சிம்புதேவனுக்கு திருப்தி கொடுக்காத புலி கிராபிக்ஸ் பணிகள்
புலி டீசர் - நடுநிலை ரசிகர்களின் கருத்து இதுதான்.....
ஸ்பாட்டில் விஜயை மகிழ்வித்த சிம்புதேவன்
லிங்கா லொகேஷனில் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions