ஒண்ணு இல்ல, மூன்று நாயகிகளுடன் டூயட் ஆடப்போகும் சிரஞ்சீவி

Bookmark and Share

ஒண்ணு இல்ல, மூன்று நாயகிகளுடன் டூயட் ஆடப்போகும் சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் 150வது படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை படத்தின் இயக்குநரை மட்டும் முடிவு செய்யவில்லையாம் சிரஞ்சீவி, மக்களின் மனதில் மெகா ஸ்டாராக அமர்ந்திருந்த இவர், திடீரென பிரஜாராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அதனை கொண்டுபோய் காங்கிரசில் இணைத்து என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார், இதனால் மக்களுக்கு இவருக்குமிடையேயான இடைவெளி எங்கேயோ போய்க் கொண்டிருக்க இதனை சரி செய்யும் விதமாக தான் மீண்டும் படங்களில் நடித்தால் என்ன என்ற யோசனை தோன்றவே உடனே 150வது படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மக்களுக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க சினிமா தான் சிறந்த வழி என எண்ணிய சிரஞ்சீவி படத்தின் கதையில் மக்களுக்கு நல்லதொரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கா ஆக்ஷன் கலந்த மசாலா படமாகவும் இது இருக்கும் எனது ரசிகர்களை ஏமாற்றும் வகையில் படம் இருக்காது என உறுதியளிக்கிறார்.

இதற்காக இப்படத்தின் கதையில் அதிக கவனம் எடுத்து வருகிறார் சிரஞ்சீவி, ஆரம்பத்தில் சிரஞ்சீவியிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் பிவிஎஸ் ரவி, இவரின் கதை சிரஞ்சீவிக்கு பிடித்துவிட்டதால் கதையில் இன்னும் சில மாற்றங்களை செய்துவிட்டால் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடலாம் என யோசனை கூறிவிட்டார்.

சிரஞ்சீவியின் 150வது படத்தில் இவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கப்போகிறார்களாம், அதுமட்டுமில்லாமல் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிப்பதால் இவருடன் இணைந்து ஒரு கெஸ்ட் ரோலில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் நடிக்கப்போகிறாராம்.

இப்படத்தை தயாரிக்கிறார் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா அவர்கள், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் சங்கம் பாலுவுக்கு அளித்த உறுதியை தொடர்ந்து இந்த படத்தில் அவனுக்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டார்களாம். எல்லாமே நடக்குது, நல்லாவே நடக்குது.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions