சிரஞ்சீவியின் 150வது படத்துக்கு இன்னும் கதை கிடைக்கவில்லை!

Bookmark and Share

சிரஞ்சீவியின் 150வது படத்துக்கு இன்னும் கதை கிடைக்கவில்லை!

டோலிவுட்டின் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி தற்காலிகமாக அரசியலில் ஓய்வு பெற்றிருப்பதால் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடிக்க பல கதைகளை கேட்டு எதுவும் சரிவராததால் 150வது படத்தை சற்று தள்ளி வைத்துள்ளாராம். 

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் நடிக்கும் ப்ரூஸ் லீ  படத்தில் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஆறுதல் தந்துள்ளது. 

இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சிரஞ்சீவி இலியானாவுடன் குத்தாட்டம் அதிரடியான சண்டை என கலக்க உள்ளதாக இயக்குநர் கூறினார். இதற்கான படப்பிடிப்பில் நேற்று(செப்டம்பர் 11) சிரஞ்சீவி கலந்து கொண்டார். 

சிரஞ்சீவியைப் பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் கூடி இருந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சிரஞ்சீவி சில நிமிடங்களுக்குள் புறப்பட்டு சென்று விட்டார். மீண்டும் அடுத்த வாரம் சிரஞ்சீவி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions