சிரஞ்சீவியின் 150வது படம் பற்றி வரும் வதந்திகள்

Bookmark and Share

சிரஞ்சீவியின் 150வது படம் பற்றி வரும் வதந்திகள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின்  150வது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்தே அந்த படத்தை பற்றி தினம், தினம் பல்வேறு செய்திகள் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.

பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் இந்த படத்திற்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை மெகா ஸ்டாரின் மகனும், பிரபல நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் மெகா ஸ்டாருக்கு ஜோடியாக பிரபல நடிகையான நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய படத்தில் மெகா ஸ்டாருக்கு மூன்று நாயகிகள் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

அதாவது மெகா ஸ்டாரின் நடன அசைவுகள் இளம் ஹீரோக்களே பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும். அதனால், அவருக்கு ஜோடியாக இளம் கதாநாயகிகள் தான் சரியாக இருப்பார் என்று அவருடைய நலன் விரும்பிகள் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் கதை மற்றொரு வளர்ந்து வரும் கதாசிரியர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், இந்த படத்தின் கதை என்னுள் உருவான ஒன்றாகும் என்று மறுத்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து கதையை உருவாக்கி வரும் பிரபல கதாசிரியரான பிவிஎஸ்.ரவி தனது டுவிட்டரில், இந்த செய்தி முற்றிலும் தவறாகும்.

பூரி ஜெகன்நாத் காரும், நானும் இணைந்து உருவாக்கிய கதை தான் ஆட்டோ ஜானியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் ஆட்டோ ஜானியாகவும், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவட நரசிம்மா ரெட்டியாகவும் மெகா ஸ்டார் இரட்டை வேடம் ஏற்று வருகிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions