சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது

Bookmark and Share

சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது

தெலுங்கு திரையின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படம் குறித்த தகவல்களை அறிய தெலுங்கு ரசிகர்கள்  மட்டுமல்லாது இந்திய திரை உலக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இடைக்காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள மெகா ஸ்டார் சிரஞ்சிவி தனது 150 படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருக்கின்றார். மெகா ஸ்டார் சிரஞ்சிவின் மகனும் தெலுங்கு திரையின் வளர்ந்து வரும் நடிகருமான ராம் சரண் நானே அப்பாவின் சிறப்பு மிக்க 150வது படத்தை தயாரிப்பேன் என்று கூறி வருகின்றார்.

இந்நிலையில் நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறிய பண்டல கணேஷ், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கதையாசிரியர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கல்யாண் ராம் இணைத்துள்ள புகைபடத்தை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு அண்ணாவிற்கு  கதை சிக்கிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி கணைகளை தொடுக்க பண்டல கணேஷ் கடவுளின் அருளும் சிரஞ்சீவியின் ஒத்துழைப்பும் இருந்தால் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டுடன் வருவார் என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளிவரும் என டோலிவுட் திரை உலகம் தவம் கிடக்கின்றது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions