சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்குப் பார்த்திபன் கொடுத்த பரிசு

Bookmark and Share

சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்குப் பார்த்திபன் கொடுத்த பரிசு

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு இன்று 60- ஆவது பிறந்தநாள். சிரஞ்சீவி 1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார்.

சில தமிழ் படங்களும் அதில் அடக்கம். மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்தான் அவரை முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிக்க வைத்தவர். எழுத்தார்ர் சிவசங்கரியின் 47 நாட்கள் என்ற கதையை அதே பெயரில் இயக்கினார் பாலசந்தர்.  

சிரஞ்சீவி வில்லனிக் ஹீரோவாக அதில் நடித்தார். ரஜினியின் இராணுவ வீரன் படத்திலும் வில்லனாக நடித்தார். தெலுங்கில் அதே நேரத்தில் நம்பர் ஒன் ஹீரோவாகவும் இருந்தார்.

பிரஜா ராஜ்யம் என்ற தனிக்கட்சியைத்தொடங்கி அரசியலிலும் காலடி எடுத்துவைத்தார் சிரஞ்சீவி. கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சிரஞ்சீவி, தற்போது அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதால் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் நடிக்கும் 150-ஆவது படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஓவியர் ஏபி ஸ்ரீதர் வரைந்த சிரஞ்சீவியின் ஓவியத்தில் பார்த்திபன் தன் கையெழுத்திட்டு,  ஹைதராபாத்தில் இன்று 60-வது பிறந்த நாள் கொண்டாடும் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பி இருக்கிறார். 


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions