நடிகர் சிரஞ்சீவி மகளுக்கு 2-வது திருமணம்!

Bookmark and Share

நடிகர் சிரஞ்சீவி மகளுக்கு 2-வது திருமணம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா கடந்த 2007-ல் தனது 18 வயதில் வீட்டை விட்டு ஓடி சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது தந்தை மற்றும் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றும், எனவே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அதன்பிறகு ஐதராபாத் திரும்பி கணவர் வீட்டில் குடியேறினார்.

பல மாதங்கள் சிரஞ்சீவி வீட்டுக்கு செல்லாமலேயே இருந்தார். அதன்பிறகு மீண்டும் பெற்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. தந்தை வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று கணவர் சிரிஷ் பரத்வாஜ் குடிபோதையில் தினமும் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்தார்.

கணவனுடன் வாழ முடியாது என்று கூறி சிரஞ்சீவி வீட்டிலேயே வந்து தங்கி விட்டார். பின்னர் கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்தார். அவருக்கு விவாகரத்தும் கிடைத்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீஜாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது.

சிரஞ்சீவியின் குடும்பத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் மகன் கல்யாண் என்பவரை மணமகனாக தேர்வு செய்தனர். ஸ்ரீஜா-கல்யாண் திருமணம் நாளை மறுநாள் (28-ந் தேதி) பெங்களூருவில் உள்ள சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு உள்ளனர்.

மணமகளுக்கு நலுங்கு நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீஜாவின் தாய் மாமனும் நடிகருமான அல்லு அரவிந்த் வீட்டில் நடந்தது. இதில் அல்லு அர்ஜுன், ராம்சரண் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு வருகிற 31-ந் தேதி ஐதராபாத்தில் நடிகர்-நடிகைகள் மற்றும் அரசியல் கட்சியினரை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த சிரஞ்சீவி திட்டமிட்டு உள்ளார்.


Post your comment

Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions