டோலிவுட்டில் இரண்டு மெகா ஸ்டார்கள் மோதல்...

Bookmark and Share

டோலிவுட்டில் இரண்டு மெகா ஸ்டார்கள் மோதல்...

டோலிவுட்டின் இரண்டு மிகப்பெரிய மூத்த ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்க இருப்பதை அனைவரும் அறிவர். அந்த படத்தின் பூஜை சிரஞ்சீவியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ம் தேதி நடக்க இருக்கின்றது.

இந்த படத்தை வரும் 2016 சங்கராந்தியின் போது ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் நந்தமூரி பாலகிருஷ்ணா தனது 99வது படமான டிக்டேட்டரை இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறார்.

பாலைய்யாவை பொறுத்தமட்டில் சங்கராந்தி எப்போதுமே ஸ்பெஷல் தான். அதாவது சங்கராந்தியில் அவர் தனது படத்தை ரிலீஸ் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

அதனால் அவர் தனது டிக்டேட்டரை வரும் 2016 சங்கராந்தியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் பாலைய்யாவின் நரசிம்ம நாயுடும், மெகா ஸ்டாரின் மிருகராஜும் சங்கராந்தியின் போது மோதியது நினைவிருக்கலாம். அந்த மோதலில் பாலைய்யாவின் படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions