விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி

Bookmark and Share

விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அறியப்படும் அரசியல் பிரமுகரும் ஆவார். இவர் நேற்று வீட்டு மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருக்கையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவரது காலில் அடிபட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிரஞ்சீவியை சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பயப்படும்படி எதுவும் நேரவில்லை என்றும் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என சிரஞ்சீவிக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இத்தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இப்படத்தினை  நடிகர் சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட்டின் முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜா தயாரிக்கவுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் அல்லது இயக்குநர் விவி விநாயக் இப்படத்தை இயக்கலாம். ஆனால் இது குறித்த இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

சிரஞ்சீவியின் பிறந்த  நாளான  ஆகஸ்ட் 22 ஆம் தேதி இப்படத்தின் பூஜை துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பிறந்த நாளான செப்டம்பர் 2 ஆம் தேதி இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions