சிரஞ்சீவிக்கு சண்டை பயிற்சி சொல்லித்தரும் ராம் சரண்

Bookmark and Share

சிரஞ்சீவிக்கு சண்டை பயிற்சி சொல்லித்தரும் ராம் சரண்

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு அவரது மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான ராம் சரண் திரையில் சண்டை பயிற்சி சொல்லிக் கொடுக்கின்றாராம். இயக்குநர் ஸ்ரீனு வைட்டால இயக்கத்தில் நடிகர் ராம் சரண் சண்டைப் பயிற்சி கலைஞராக நடித்து வருகின்றார்.

ப்ரூஸ் லீ என பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தில் ராம் சரண் திரைப்பட நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சிகள் சொல்லித் தரும் ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கின்றார். இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். சிரஞ்சீவிக்கு சண்டை பயிற்சி கற்றுக்கொடுப்பது போன்று ராம் சரண் நடிக்கின்றாராம்.

இதனால் ராம் சரண் ரசிகர்கள் மட்டுமல்லாது சிரஞ்சீவி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.  சிரஞ்சீவி மட்டுமல்லாது டோலிவுட்டின் பிரபல நடிகர்களான பவன் கல்யாண், நாகார்ஜுனா, ரானா டகுபதி ஆகியோரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

டோலிவுட்டின் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிப்பதால் இப்படம் ரசிகர்களைக் கவரும் என ராம் சரண் கூறுகின்றார். மேலும் தன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள பிரபலங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
பாகுபலி படத்தில் சிரஞ்சீவி?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து விஜய்சேதுபதிக்கு ஜோடியான நடிகை
ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்
சூப்பர் ஸ்டார்கள் இணையும் புதுப்படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் கூட்டணி இணைகின்றது
படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions