மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி

Bookmark and Share

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிகை சார்மி

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படம் பற்றிதான் தற்போது டோலிவுட்டில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வருகிறது. நடிகர் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் இயக்கப் போவதாக அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ராம் சரண் அறிவித்துள்ளார்.

தற்போது இப்படம் பற்றி புதுபுது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் நடிகை சார்மி சிறப்பு வேடத்திலோ அல்லது ஒரு பாடலுக்கோ நடனமாட ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

இதனை நடிகை சார்மியே சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் மறைமுக தெரிவித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகின்றது.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர்கள்  ராஜசேகர், மோகன்பாபு, மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர்களை கெளரவ வேடத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ம் தேதி இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் கொண்ட விபரங்களும் வெளியிடப்படும் என தெரிகின்றது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions