பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்கும் சிரஞ்சீவி பிறந்தநாள்விழா

Bookmark and Share

பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்கும் சிரஞ்சீவி பிறந்தநாள்விழா

ஆகஸ்ட் 22 ஆம் தேதி டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாள்.  இவ்விழாவை வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.

சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகருமான ராம் சரண் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருகிலிருந்து கவனித்து வருகின்றார். பிரபலங்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் அழைப்பிதழை ராம் சரணே கொடுத்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். டோலிவுடிலிருந்தும் நடிகர்கள் நாகார்ஜுனா,வெங்கடேஷ், ராஜேந்திர பிரசாத்,ரவி தேஜா,நிதின்,அல்லு அர்ஜுன்,அல்லு அரவிந்த்,ஜெகபதி பாபு உள்ளிடோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.  

மேலும் நடிகைகள் காஜல் அகர்வால்,சமந்தா,ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜெனிலியா ஆகியோருக்கும் பிறந்தநாள் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாட்டால் பிரிந்திருந்த சிரஞ்சீவியின் சகோதரரரும் நடிகருமான பவன் கல்யாண் தனக்கு கொடுத்த அழைப்பிதழை ஏற்று விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார்.

சிரஞ்சீவியையும் பவன் கல்யாணையும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஒரே மேடையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். சிரஞ்சீவியின் பிறந்தநாள் விழா ஹைதராபாத்தில் உள்ள சில்பகல வேதிகா கலையரங்கில் நாளை (ஆகஸ்ட் 21) மாலை 3 மணிக்கு துவங்கவுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சிரஞ்சீவி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். பல பிரபலங்கள் விழாவிற்கு வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


Post your comment

Related News
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions