சிரஞ்சீவி - ராஐசேகர் மோதல் : ஜீவிதாவுக்கு பறிபோன வாய்ப்பு

Bookmark and Share

சிரஞ்சீவி - ராஐசேகர் மோதல் : ஜீவிதாவுக்கு பறிபோன வாய்ப்பு

டோலிவுட்டில் சிரஞ்சீவிக்கும், டாக்டர் ராஜசேகருக்கும் சினிமா மற்றும் அரசியல் களத்தில் மோதல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் முக்கிய புள்ளிகள் சிலர் சமாதான பேச்சு நடத்தியதில் சில காலம் மோதலுக்கு பூசுவேலை செய்து மூடிமறைக்கப்பட்டது.

காமெடி நடிகர் மரணம், பட அதிபர் மரணம் என டோலிவுட்டில் அடுத்தடுத்து நடந்த சோக நிகழ்வுகளும் மோதல் பிரச்னையை முற்றிலுமாக மறக்கடிக்கச் செய்திருந்தது. தற்போது மீண்டும் சிரஞ்சீவி-ராஜசேகர் மோதல் வெடிக்கத் தொடங்கி உள்ளது.

சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடிக்க ஸ்ரீனு வைத்லா இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் ராம் சரண் அம்மாவாக நடிக்க ஜீவிதாவிடம் பேசப்பட்டு வந்தது. கடந்த 20 வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜீவிதாவும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அரசியல் களத்தில் சிரஞ்சீவி காங்கிரசிலும் ராஜசேகர்-ஜீவிதா பாஜவிலும் என வெவ்வேறு துருவங்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ராம் சரணின் அம்மாவாக ஜீவிதா நடிக்க ஒப்புக்கொண்டது ரசிகர்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ராம் சரணின் அம்மாவாக ஜீவிதாவை நடிக்க வைக்கவிருந்த ஐடியாவை பட குழுவினர் தற்போது கைவிட்டிருக்கின்றனர். அவருக்கு பதிலாக ரோஜா அல்லது மதுபாலாவை நடிக்க வைக்க பேச்சு நடத்தி வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions