சிரஞ்சீவிக்கு பவன் கல்யாண் தரும் பிறந்தநாள் பரிசு

Bookmark and Share

சிரஞ்சீவிக்கு பவன் கல்யாண் தரும் பிறந்தநாள் பரிசு

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 60வது பிறந்தநாளை ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.

அன்றைய தினமே தனது 150வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட சிரஞ்சீவி ஏற்பாடு செய்துள்ளார். ரசிகர்களும் சிரஞ்சீவி குடும்பத்தாரும் அவருக்கு வித விதமாக பிறந்தநாள் பரிசுகளை தேர்வு செய்து வரும் நிலையில், அவரது தம்பியும் பிரபல நடிகருமான பவர் ஸ்டார் பவன் கல்யாணும் சிரஞ்சீவிக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

பவன் கல்யாண் தற்போது இயக்குநர் பாபி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி பிறந்தநாளன்று பிறந்த நாள் பரிசாக வெளியிட முடிவு செய்துள்ளாராம்.

காபர் சிங் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க உள்ளார். நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions