எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை

Bookmark and Share

எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே மா மனிதர் விருது வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை.

மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும், எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இன்றும் தமிழக மக்களில் பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான் பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.

நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் இன, மத, கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து

'எம்ஜிஆர் மா மனிதர் விருது' என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும் அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment

Related News
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
சுசிலீக்ஸுக்கு பொறுப்பேற்கிறேன், ஆனால்...: சுசித்ரா பேட்டி#suchileaks
சுசித்ரா தற்போது எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் தெரியுமா? வெளிவந்த வீடியோ
பாடகி சுசித்ரா எங்கே?: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா?
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்
நான் கணவரை விவாகரத்து செய்கிறேன், தனுஷ் கலாய்ச்சுக்கோ: பாடகி சுசித்ரா
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
கொங்கு நாட்டில் பீட்டா பங்காளி ஹெச்ஏஎஸ்-ன் சித்ரா இசை நிகழ்ச்சி- கடும் எதிர்ப்பால் ரத்து!
நான் பீட்டாவை ஆதரிக்கிறேன், ஆனால்- பாடகி சுசித்ரா ஓபன் டாக்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions