துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம். 

அவரது மகனான துருவ் விக்ரம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. 

அதற்கேற்றாற் போல் துருவ்வும் அவரது டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாகி வந்தார். இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதில் விக்ரம் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார். `அர்ஜுன் ரெட்டி' படத்தை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 


Post your comment





Related News
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
ஸ்கெட்ச் படத்தில் பாடல் பாடிய விக்ரம்
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'
விக்ரமின் 54வது படம் பற்றிய புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
விக்ரம் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பிரபல இயக்குனர்!
விசித்திரமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சீயான் விக்ரம்!
விக்ரம் மகளுக்கு விரைவில் திருமணம்!
பாய்ந்துவந்த ரசிகர் குறித்து முதல்முறையாக பேசிய விக்ரம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions