விக்ரமின் 54வது படம் பற்றிய புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

விக்ரமின் 54வது படம் பற்றிய புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்

விக்ரம் படம் என்றாலே தற்போது ரசிகர்கள் ஆவலாகி விடுகின்றனர். புதுப்படத்தில் விக்ரம் அப்படி என்ன வித்தியாசம் காட்ட போகிறார் என்ற ஆவல் அனைவரிடத்திலும் வந்துவிட்டது.

தற்போது விக்ரமின் 54வது படத்தை விஜய் சந்தர் இயக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகிவிட்டது. படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கும் தமன் இதுவரை மூன்று பாடல்களை கம்போஸ் செய்துவிட்டாராம். விரைவில் முழு பாடல்கள் பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தை முடித்ததும் விக்ரம் இப்படத்தில் இணைய இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions