விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'

Bookmark and Share

விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் `ஸ்கெட்ச்'. வடசென்னை பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் மற்றொரு நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வாரம் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ தகவல், விக்ரம் பிறந்தநாளான வருகிற 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு விக்ரம் பிறந்தநாளன்று அவரது படம் குறித்த புதிய தகவல் வெளியானால், அது விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சரி என்ன தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் தீவிரமாக யோசித்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக்கோ அல்லது டீசரோ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க விக்ரம் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
அம்மாடி சீனாவில் மட்டும் ரஜினியின் 2.O இத்தனை தியேட்டர்களில் ரிலீசா? - மிரண்டு போன திரையுலகம்.!
மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!
அரைகுறை உடையில் நடிகை செய்த வேலை - வைரலாகும் புகைப்படம் உள்ளே !
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions