ஜெயலலிதாவைத் தொடர்ந்து பிரபல நடிகர் சோ காலமானார்! மீண்டும் ஒரு இழப்பு

Bookmark and Share

ஜெயலலிதாவைத் தொடர்ந்து பிரபல நடிகர் சோ காலமானார்! மீண்டும் ஒரு இழப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிலிருந்து இன்னும் தமிழ்நாட்டு மக்கள் மீளாதநிலையில் பிரபல நடிகர் சோ காலமாகியுள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் சோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சோவை சந்தித்து உரையாடினார். அதன்பிறகு உடல்நலம் தேறி வீட்டிற்குத் திரும்பி வந்த அவர், பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சோவுக்கு மீண்டும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ ராமசாமி.துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்து தந்தது.

82 வயதான இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இவரின் இழப்பு திரையுலகத்திலும், அரசியல் வட்டத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment

Related News
இந்த படத்துக்கு குழந்தைகள கூட்டிட்டு வராதீங்க! பிரபல நடிகை
பிரியங்கா சோப்ராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய ராக்கி சாவந்த்
நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை: மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா
ப்ரியங்கா சோப்ரா உடையை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்- வைரலான புகைப்படம் உள்ளே
இன்று உலகையே கலக்கும் ஒரு ஹீரோயினின் திறமையை கண்டுப்பிடித்தது விஜய் தான், வெளிவந்த தகவல்
உலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு: முதலிடம் யாருக்கு தெரியுமா?
இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
ஆபாசமாக நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள்: பிரியங்கா சோப்ரா
ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions