சீரியல் பாட்டியான சிஐடி சகுந்தலா!

Bookmark and Share

சீரியல் பாட்டியான சிஐடி சகுந்தலா!

ஜெய்சங்கர் நடித்த சிஐடி சங்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் சிஐடி சகுந்தலா. அதன்பிறகு தரிசனம், எதிர்காலம், என் அண்ணன், என் மகன், எங்க மாமா, எங்கள் தங்கம், கல்யாண ஊர்வலம் என சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தற்போது கல்யாண பரிசு என்ற சீரியலில் பாட்டி வேடத்தில் நடித்து வருகிறார்.  

மேலும், முன்பெல்லாம் பக்கம் பக்கமாக வசனங்களை மனப்பாடம் செய்து நடித்தபோதும் தற்போது வயதாகி விட்டதால் அவரால் சீரியல் டயலாக்குகளை மனப்பாடம் செய்ய முடியவில்லையாம். நடித்துக்கொண்டே வரும்போது டயலாக்கை விட்டு விடுகிறாராம்.

அதனால், ப்ராம்டிங் முறையிலேயே அதிகப்படியான வசனம் கொண்ட காட்சிகளில் நடிக்கிறாராம் சிஐடி சகுந்தலா. மேலும், சீரியலில் பாட்டி வேடத்திலேயே நடிக்கும் அவர், படப்பிடிப்பில் மதிய இடைவேளை நேரங்களில் நிறைய பாட்டி கதைகளையும் சொல்கிறாராம்.

இதனால், இளவட்ட நடிகைகள் அவரது அனுபவ கதைகளை கேட்க அவர் முன்பு கூடிவிடுகிறார்களாம்.


Post your comment





Related News
வீட்டில் தூக்குபோட்டு பிணமாகத் தொங்கிய பிரபல நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகர்களுக்குள் எந்தவித வேறுபாடு இருக்ககூடாது : சி.ஐ.டி. சகுந்தலா
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் போட்டோ எடுப்பதா?-பிரகாஷ்ராஜ் பாய்ச்சல்
சல்மான்கான் குடிப்பழக்கம் பாலிவுட் படவுலகிற்குரூ.500 கோடி இழப்பு..!
நடிகர் நாசர் மகனுக்கு கோர விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்..!
ஸ்ரீ தேவியின் கணவருக்கு விபத்து: கார் சுக்கு நூறாக நொறுங்கியது..!
சல்மான்கான் கார் ஏற்றி கொன்ற வழக்கு: கோர்ட்டில் ஆஜர்..!
நடிகர் சூர்யா வீட்டில் யாரோ சிகரெட் போட்டதால் தீ விபத்து..!
இந்தி நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் பரபரப்பு..!
படப்பிடிப்பில் நடிகர் ஷாருகானுக்கு விபத்து மருத்துவமனையில் அனுமதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions