சினிமா கேளிக்கை வரிச்சலுகை யாருக்குப் போய் சேர வேண்டும்?

Bookmark and Share

சினிமா கேளிக்கை வரிச்சலுகை யாருக்குப் போய் சேர வேண்டும்?

சினிமா கேளிக்கை வரிச்சலுகை தொகையான 30 சதவீதம் பணம், யாருக்குப் போய் சேர வேண்டும்? என்பது தொடர்பான விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தனத்தை சேர்ந்த கே.ஜே.சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நான் என் குடும்பத்துடன் கயல் என்ற தமிழ் படத்தை 25.12-2014 அன்று பார்க்க சென்றேன். இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் விலை ரூ. 120 ஆகும். 3 டிக்கெட்டுகள் வாங்கினேன். இந்த படத்திற்கு வரிச்சலுகை 30 சதவீதம் வழங்கப்பட்டிருந்தது. எனவே, இந்த வரிச்சலுகை போக ரூ.83.30 காசுகள் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

ஆனால்,ரூ.120 வீதம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கி விட்டார்கள். மொத்தத்தில் அன்று ரூ.107 கூடுதலாக வசூலித்து விட்டார்கள். எனவே, இந்த பணத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பித்தர தியேட்டர் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் :-

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தமிழ் படங்களில் கேளிக்கை வரி சலுகைகள் வன்முறை காட்சிகள், ஆபாசக்காட்சிகள், பிறமொழி வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனம் குறைவாக இருக்கும் தமிழ்மொழி படங்களுக்கு வழங்கப்படுகிறது. 

திரைப்படங்களை பொதுமக்களுக்கு காட்டும் கடமை தியேட்டர் உரிமையாளர்களுக்கு உண்டு. அரசு வழங்கும் கேளிக்கை வரிச்சலுகையையும் தியேட்டர்களில் அமல்படுத்தியாக வேண்டும்.

தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் சலுகைதான் வழங்கப்படுகிறது. இந்த வரிச்சலுகை சினிமா தொழிலுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மட்டும்தான், படம் பார்க்கும் பொதுமக்களுக்கு பொருந்தாது என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது.

எனவே,மனுதாரரிடம் வரிச்சலுகை இல்லாமல் கட்டணத்தை வசூலித்தது தவறு. ஒருவரிடம் அதிக கட்டணம் வசூலித்தால், கூடுதலாக வசூலிக்கப்பட்டதை திருப்பி தந்தாகவேண்டும். எனவே, மனுதாரரிடமிருந்து வரிச்சலுகையை கணக்கில் கொள்ளாமல், மனுதாரைடம் இருந்து கூடுதலாக வசூலித்த ரூ.107-ஐ தியேட்டர் உரிமையாளர் திருப்பி தரவேண்டும்.

ஏற்கனவே வரிச்சலுகை தொடர்பாக வணிகவரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டியது இல்லை. அதேவேளையில் இந்த வரிச்சலுகை படம் பார்க்கும் ரசிகர்களுக்குதான் சென்றடைய வேண்டும். 
ஆகவே, கேளிக்கை வரி சலுகை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில், நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த 4 வாரத்திற்குள்  தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வரிச்சலுகை பெற்ற படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வணிகவரித்துறை அதிகாரிகள் ஆகியோர் உரிய நெறிமுறைகளை வகுத்து, வரிச்சலுகை பெறும் திரைப்படங்களை பார்க்கவரும் ரசிகர்கள் மீது வரிபாரம் விதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, மும்பையை சேர்ந்த ‘ஐநாக்ஸ்’ தியேட்டர் குழுமம் சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

முன்னர் இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி, தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தல் சட்டம்-1952-ஐ மீறிய வகையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். வரிவிலக்கு தொடர்பான முழுப்பலனும் டிக்கெட் வாங்கி சினிமா பார்ப்பவர்களை மட்டுமே சென்று சேர வேண்டும் என்னும் கருத்தும் ஏற்புடையதல்ல.

இந்த வரிவிலக்கை பெறுவதற்காக தேவையான அம்சங்களை உள்ளடக்கியபடி படத்தை தயாரித்து, அரசை திருப்திப்படுத்தி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அவற்றை வாங்கி திரையிடும் வினியோகிஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைத்துறையினரை இந்த வரிவிலக்கின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதை கவனிக்கவும் நீதிபதி தவறி விட்டார். 

எனவே, இந்த புதிய மனுவின் மீது மீண்டும் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவின் மீதான விசாரணை, நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார் நீதிபதி.


Post your comment

Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions