மாதத்தில் ஒரு வாரம், குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட திரைப்படகுழு முடிவு!

Bookmark and Share

மாதத்தில் ஒரு வாரம், குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட திரைப்படகுழு முடிவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டு கூட்டம், சென்னையில் நடந்தது.

அதில் சென்னை-செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ‘தெறி’ பட தயாரிப்பாளர் எஸ்.தாணு ஆகியோர் இடையே உள்ள பிரச்சினை குறித்து பேசப்பட்டு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.

மூன்று அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து பேசி, தமிழ் திரைப்பட துறை சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான செயல்களை வரைமுறைப்படுத்தவும், அரசிடம் பேசி வாங்க வேண்டிய சலுகைகளை கேட்டு வாங்கவும் ஒரு உயர்மட்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில், எஸ்.தாணு, அருள்பதி, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட திரைப்பட பாதுகாப்பு குழு உருவாக்கப்படுகிறது.

இந்த குழுவின் ஆலோசனைப்படி, குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் நலன் காக்க வேண்டி, மாதத்தில் ஒரு வாரம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் மானிய தொகை தயாரிப்பாளர்களுக்கு உடனடியாக கிடைக்க, அமையப்போகும் தமிழக அரசிடம் முறையிட்டு பெறுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions