கான்ஜுரிங் 2 பார்த்துக்கொண்டு இருந்தபோதே தமிழர் ஒருவர் மரணம்!

Bookmark and Share

கான்ஜுரிங் 2 பார்த்துக்கொண்டு இருந்தபோதே தமிழர் ஒருவர் மரணம்!

தமிழில் பல ஹாரர் படங்கள் வந்தாலும் ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இங்கே இருக்கும் மவுசு எப்போதும்குறையாது. இதற்கு 2013-ல் வெளிவந்த தி காஞ்சரிங் ஒரு உதாரணமாக அமைந்தது.

சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியானது. மூன்று நாட்களில் சென்னையில் மட்டுமே 1 கோடி வசூல் செய்த இப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அண்மையில் திருவண்ணாமலையில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர், இப்படத்தில் வரும் திகில் காட்சியில் அதிர்ச்சியாகி நெஞ்சுவலியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions